Tamilnadu

சிறார் திரைப்படத் திருவிழா.. வெற்றி பெறும் மாணவர்களை HollyWood அழைத்துச் செல்லும் பள்ளிக் கல்வித்துறை !

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் "சிறார் திரைப்படத் திருவிழா" துவக்க நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூகலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறார் திரைப்பட திருவிழா'வை துவக்கி வைக்கவுள்ளார்.

சிறார் திரைப்பட திருவிழா மூலம் பள்ளிகள் தோரும் மாதம் ஒரு திரைப்படம் திரையிடப்பட்டு அத்திரைப்படம் சார்ந்த போட்டிகள் வட்டார, மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்படும். அதில் வென்று மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு பயிற்சி முகாம் மூலம் போட்டி சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இப்போட்டிகளில் வெற்றி பெரும் மாணவ மாணவியர்களை அரசு சார்பில் வெளி நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வர்.

அந்த வகையில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 152 மாணவர்கள், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் சிறார் திரைப்படத் திருவிழாவில் கலந்துகொண்டுள்ளனர். இத்திரைப்பட திருவிழாவில் குறும்பட போட்டிகள் நடத்தப்படும், இக்குறும்பட போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “கல்வியார்கள் திரைத்துறையை சார்ந்தோர் இத்திட்டத்தை பெரிதும் வரவேற்று பாராட்டியுள்ளனர். நடத்தப்படும் போட்டியில் குரும்படத்துக்கான முழு திறனை மாணவர்கள் காட்ட வேண்டும். குறும்பட போட்டிகளில் வெற்றிபெரும் மாணவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ்'இல் உள்ள ஹாலிவுட்'க்கு அழைத்து செல்லவுள்ளோம்.

இந்த ஆண்டு கல்வி விளையாட்டு, திரைத்துறை போன்ற 6 துறைகளில் பல்வேறு போட்டிகள் நடத்தி, அதில் இருந்து 240 குழந்தைகளை வெளிநாட்டு சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ள்து. அதன் ஒரு பகுதியாக சிறார் திரைப்பட திருவிழா மூலம் குரும்பட போட்டிகள் நடத்தப்படு அதில் வெற்றி பெறும் 25 மாணவர்கள் வெளிநாடு அழைத்து செல்வோம்.

கல்வி ஒன்று மட்டுமே நமக்கான வாழ்க்கையை தேவையானது அல்ல. நமக்கான தனித்திறமைதான் நமக்கான சிறப்பான வாழ்க்கையை பெற்று தரும் என்பதன் அடிப்படையில் இத்திட்டம் வெளிப்படுத்தியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,”ஆறு நாட்கள் நடைபெறும் சிறார் திரைப்படத் திருவிழாவில் 10 மாணவர்கள் கொண்ட குழுக்களாக பிரித்து அக்குழுக்களுக்கு குறும்பட போட்டிக்கு நடத்தப்படும் குறும்பட போட்டிகளை வெற்றிபெறும் 25 மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வர்.

மாதிரி பள்ளிகளில் சேர்வதற்கு நுழைவு தேர்வு கிடையாது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது என்பதை மதிப்பீடு செய்வதற்காக மட்டுமே மதிப்பீட்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதனை மாணவர்களுக்கான நுழைவு தேர்வு என்று எண்ணுவது தவறு.

தருமபுரியில் மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என்ற பெயரில் பள்ளிகளில் உள்ள மேசைகள் போன்ற பொருட்களை உடைப்பது போன்ற செயல் மனவருத்தத்தை அளிக்கிறது. இதற்கு தீர்வு கானும் வகையில் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேசி வருகிறோம். ஓரிரு நாட்களில் இதற்கு முழுமையாக தீர்வு காணப்படும்.

போராட்டத்தில் ஈடுபடும் பகுதி நேர ஆசிரியர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்த வகையில அவர்களை அழைத்துப் பேசி அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கலைத்திருவிழாவில் முதல்வருக்கு பரிசாக அளிக்க உள்ள நூல் இதுதான்: அமைச்சர் அன்பில் குறிப்பிடும் நூல் என்ன?