Tamilnadu
இரயில்வே கேட் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல்.. - கேரள இளைஞரை அதிரடியாக கைது செய்த காவல்துறை !
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது பாவூர்சத்திரம் என்ற பகுதி. இங்கு இரயில் நிலையம் ஒன்று உள்ளது. நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையின் அருகில் பாவூர்சத்திரம் இரயில்வே கேட் கீப்பராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நித்யா சந்திரன் (37) என்ற இந்த பெண் ஊழியருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இவர்கள் தென்காசியில் உள்ள குருசாமிபுரம் என்ற கிராமத்தில் வாழ்ந்து வரும் நிலையில், இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று நித்யா வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது சுமார் இரவு 8.30 - 9.30 மணி அளவில், நெல்லை - பாலக்காடு இடையேயான பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் 9:30 மணிக்கு வரும் என்பதால் அதற்கான பணியில் கேட் கீப்பர் அறையிலிருந்து பணியாற்றிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இவரது அறைக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அந்த நபர் யார் என்று கேட்டபோது அதற்கு அந்த இளைஞர் பதில் எதுவும் தெரிவிக்காமல், உடனே அந்த பெண்ணை இழுத்து அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். இவரது பிடியில் இருந்து அந்த பெண் எவ்வளவோ தப்பிக்க முயன்றும் அவரை வலுக்கட்டாயப்படுத்தியுள்ளார் அந்த இளைஞர். தொடர்ந்து அவரிடம் அத்துவமீறலில் ஈடுபட்டார்.
இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிட்டதால், அவரது தலையில் அருகிலிருந்த போன் ரிசீவரால் தாக்கினார். இதில் மேலும் அந்த பெண் அலறி துடித்தார். நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையின் அருகில் மக்கள் நடமாட்டம் காணப்படுவதால், அந்த பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்தனர். மக்கள் வருவதை அறிந்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
பின்னர் அங்கு வந்தவர்கள், அந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தென்காசி எஸ்பி சாம்சன், டிஎஸ்பி சகாய ஜோஸ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அந்த பகுதியில் கட்டுமான தொழில் நடைபெற்று வருவதால் வட மாநில இளைஞர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனரா என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதோடு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அதில் வட மாநில இளைஞர்கள் யாரும் இல்லை என தெரியவந்தது.
தொடர்ந்து விசாரிக்கையில், கேரளாவைச் சேர்ந்த இளைஞர் அனீஸ் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அனீஸை கைதுசெய்து அழைத்துவந்த காவல்துறை அதிகாரிகள், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள அனீஸ் மீது ஏற்கனவே கேரளாவில் பக்கத்து வீட்டு பெண்ணிடம் இதே போன்று நடந்து கொண்டதாக கேரள மாநிலம் குன்னிகோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!