Tamilnadu
திடீரென பற்றி எரிந்த கார்.. கதவு திறக்க முடியாமல் சிக்கிய தம்பதி: நூலிழையில் உயிரை காப்பாற்றிய பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கனாதன் தெருவில் பாலமுருகன் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அவரது மனைவி அனுஷா இருந்துள்ளார்.
இதையடுத்து கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்த பாலமுருகன் உடனே காரை நிறுத்தியுள்ளார்.
ஆனால் கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. பிறகு உடனே பாலமுருகன் காரில் இருந்து வெளியேவந்துள்ளார். ஆனால் அவரது மனைவி அனுஷா காரின் கதவை திறக்க முடியாமல் மாட்டிக் கொண்டுள்ளார். பிறகு அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் காரின் கதவை திறந்து அனுஷாவை காப்பாற்றியுள்ளது. இதில் அவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இதுபற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார் உதவியுடன் பொதுமக்கள் காரில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தனர். இருப்பினும் காரின் முன்பக்கம் முற்றிலுமாக எரிந்து நாசமானது.
மேலும் காயமடைந்த அனுஷாவை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடிரென தீபற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!