Tamilnadu
ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்கம் கடத்தல்.. சிக்கவைத்த CCTV காட்சி: முகமூடி கொள்ளையர்களை நெருங்கிய போலிஸ்!
சென்னை அடுத்த பெரம்பூரில் ஜேஎல் கோல்டு ஹவுஸ் என்ற பெயரில் நடைக் கடை ஒன்று உள்ளது. இதன் உரிமையாளர் ஸ்ரீதர். இந்த நகைக்கடையில் நேற்று முன்தினம் இரவு ஷட்டரை துளையிட்டு மர்ம நபர்கள் ஒன்பது கிலோ தங்க நகை மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கம், வைரம் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க 9 தனிப்படை அமைத்து போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில் நகைக்கடையில் புகுந்து கொள்ளையடித்து விட்டு காரில் கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது.
குறிப்பாக சி.சி.டி.வி காட்சிகளின் மூலம் இரண்டரை மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு காரில் ஏறி கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளது போலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதேபோல், கொள்ளையர்களைச் சம்பவ இடத்தில் இறக்கி விட்ட பின்பாக யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என அந்த பகுதியிலே இன்னோவா கார் கொள்ளை சம்பவம் முடியும் வரை சுற்றித் திரிந்து வந்துள்ளது. பின்னர் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு கோயம்பேடு வழியாக, மதுரவாயிலை தாண்டி பூந்தமல்லி நோக்கி காரில் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காருக்குள் 4 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் நகைக் கடையின் இரும்பு கதவில் துளையிடுவதற்காகக் கொள்ளையர்கள் 5 கிலோ சிலின்டரை பயன்படுத்தி வெல்டிங் செய்து துளையிட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 3 உதவி ஆணையர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட 9 தனிப்படை போலிஸார் தற்பொழுது கொள்ளையர்களைப் பிடிப்பதற்காகத் தீவிர தேடுதல் வேட்டியை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!