Tamilnadu
அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. சாலையில் பற்றி எரிந்த கார்: தாம்பரத்தில் பரபரப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானடோரியம் வள்ளுவர் குருகுலம் பள்ளி அருகே உள்ள சிக்னலில் சினிமா ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தப்படும் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது.
அப்போது, பின்னால் வந்த இரண்டு கார்களும் அடுத்தடுத்து மோதியது. இதில் ஒரு கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் உடனே வெளியே வந்ததால் உயிர் தப்பினர். ஒன்றின் மீது ஒன்று மோதி கொண்டதில் ஒரு கார் திடீரென தீபற்றி எரியத் தொடங்கியது இதில் காரில் பயணித்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்.
மேலும் அவ்வழியாக வந்த தண்ணீர் லாரியை கொண்டு வாகனத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அதேபோல் கார்களில் பயணித்தவர்களுக்குச் சிறிய காயம் ஏற்பட்டதால் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த விபத்தால் தாம்பரம், பல்லாவரம் செல்லும் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
VBG RAMG சட்டத்தை எதிர்க்கும் பஞ்சாப் : சட்டமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!
-
புத்தாண்டு கொண்டாட ஊருக்கு போறீங்களா?... : அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
கும்கி யானைகளை பராமரிப்பதற்காக ரூ.8 கோடியில் சாடியவல் யானைகள் முகாம் : திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!
-
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பிய குடியரசு தலைவர் : வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
திருத்தணி சம்பவம்! : உடனடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு காவல்துறை! நடந்தது என்ன?