Tamilnadu
“ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டி” : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதேதொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னையில் இரண்டு நாட்களாக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்.
Also Read
-
400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் : சோகத்தில் திரையுலகம்!
-
த.வெ.க அரசை எதிர்க்கும் சி.பி.எம் : நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - காரணம் என்ன?
-
“முதல்வர் அறை டெண்டரில் முறைகேடு? மோசடித்தனத்தின் உச்சம்” : முரசொலி தலையங்கம் விளாசல்!
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!