Tamilnadu
“தமிழர்களின் உணர்வை சீண்டி பார்க்க வேண்டாம்..” : ஆளுநர் தமிழிசைக்கு கனிமொழி MP பதிலடி!
சென்னை சேப்பாக்கத்தில் நம்ம ஊரு திருவிழா கலைக் குழுவினருக்கு தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பொங்கல் பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி.,”தமிழ்நாடு என்ற பெயர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழ்நாடு என்ற பெயரை அண்ணா வைத்தார்.
தமிழ்நாடு என சொல்லக்கூடாது என்றுகூறும் உரிமை யாருக்கும் கிடையாது. தமிழ் மக்களின் உணர்வு மிகவும் ஆழமானது. அது மற்ற உணர்வுகளைபோல் பூசிக்கொண்டு தமிழ் மக்கள் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் அந்த உணர்வை சீண்டி பார்த்தால் தக்க பதிலடிகொடுப்பார்கள்.
சில மாநிலங்களில் ஆளுநர்களை முதல்வர்கள் வம்புக்கு இழுப்பது வாடிக்கையாகிவிட்டது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆளுநர்களை அவர்கள் வம்புக்கு இழுக்கவில்லை.
பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள்தான் ஆளும் கட்சியை வம்புக்குஇழுக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு என்ற பெயர் உறுத்தலாகவே உள்ளது. எப்பொழுதும் அமைதியாக பேசும் முதல்வர் மிகக் கறாராகப் பதில் சொல்லக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!