Tamilnadu
பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய காவலர்கள்: வியந்து பார்த்த வெளிநாட்டுப் பயணிகள்!
ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று மாலை 6 மணி முதலே காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். புத்தாண்டைப் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விதமாக பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் காஞ்சிபுரம் பேருந்து நிலைய சிக்னல் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சரியாக 12 மணிக்குப் புத்தாண்டு பிறந்ததை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள், பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருடன் கேக் வெட்டி காவல்துறையினர் கொண்டாடினர். பிறகு பொதுமக்களுக்கு கேக் வழங்கி காவல் கண்காணிப்பாளர் சுதாகர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பொதுமக்களுடன் இணைந்து போலிஸார் புத்தாண்டு கொண்டாடியதைப் பார்த்த பெல்ஜியம் நாட்டை சார்ந்த பெண்மணி வியந்துபார்த்து, "இது போன்று நிகழ்வு நான் பார்த்ததில்லை. இது புதிதாக இருக்கிறது நன்றாகவும் இருக்கிறது" என போலிஸாரை பாராட்டினார்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!