Tamilnadu
நடிகர் துல்கர் சல்மான் வீட்டின் கார் ஓட்டுநர் மர்ம மரணம்.. போலிஸ் தீவிர விசாரணை!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்மூட்டி. இவரது மகன் துல்கர் சல்மானும் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். துல்கர் சல்மானுக்கும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
நடிகர் துல்கர் சல்மான் 'சீதாராம்','கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்','சார்லி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவர் சென்னையில் தனது குடும்பத்தாருடன் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் வடபழனியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் கடந்த ஒரு மாதமாக ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பீட்சா மற்றும் கோக் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இன்று விமான நிலையத்திற்கு நடிகர் துல்கர் சல்மானை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் அவரது வீட்டியே பாஸ்கர் தங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நள்ளிரவு பாஸ்கருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். இதைப்பார்த்த பணியாளர் ஸ்ரீஜித் என்பவர் அரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பாஸ்கர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!