Tamilnadu
8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் அதிரடி!
கரூர் சின்ன ஆண்டாங்கோயில் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி. 8ம் வகுப்பு படித்து வந்தார். அருகிலுள்ள ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த கெளசிக்குமார் என்ற இளைஞர் அந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 2021 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ம் தேதி சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெற்றோர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தி கௌசிக்குமார் அவரது பெற்றோர் சரவணன் மற்றும் சுமதி ஆகியோரை கைது செய்தனர். போலிஸார் அந்த சிறுமியை மீட்டபோது அந்த சிறுமி 4 வார கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கெளசிக்குமார் அவரது பெற்றோர் சரவணன், சுமதி ஆகியோர் மீது சிறுமியை கடத்தியது, குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் மூவர் மீதும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குற்றம் சுமத்தப்பட்ட கெளசிக்குமாருக்கு 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். இதே போல கௌஷிக் குமாரின் பெற்றோர் சரவணன், சுமதி ஆகியோருக்கு 22 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
Also Read
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !
-
“இது ஆன்மிகம் அல்ல; கேடுகெட்ட அரசியல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
“மதுரை தொழில் நகரமாகவும் புகழ் பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை இலட்சியம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!