Tamilnadu
தீப்பிடித்து எரிந்த AC.. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலதிபர் உடல் கருகி பலி: இரவில் நடந்த கொடூரம்!
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த கட்டுமான நிறுவன தொழில் அதிபர் சுரேஷ்குமார். இவரது மகன் ஸ்டீபன் ராஜ். இவரது மனைவி சுஜிதா பிரசவத்திற்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனையில் இருந்துள்ளனர்.
மேலும் வீட்டில் சுரேஷ் குமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து இன்று காலை அவரது வீட்டிலிருந்து புகை வருவதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறை முழுவதும் தீ பிடித்து எரிந்திருந்தது. மேலும், உள்ளே இருந்த சுரேஷ் குமார் உடல் கருகி சடலமாக இருந்ததை போலிஸார் கண்டனர். பிறகு போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இது குறித்து விசாரணை செய்தபோது ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும், குடும்ப உறுப்பினர்கள் மற்றவர்கள் மருத்துவமனையில் இருந்ததால் உயிரி தப்பியுள்ளனர். மின்கசிவால் ஏ.சி தீப்பிடித்து எரிந்த விபத்தில் தொழிலதிபர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!