Tamilnadu
அதிகாலையில் பற்றி எரிந்த 2 கார்.. பதறியடித்து ஓடிய குடியிருப்பு வாசிகள்: நடந்தது என்ன?
சென்னையை அடுத்த பழவந்தாங்கல் தணிகை வேம்படி சக்தி விநாயகர் கோயில் தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களது கார் உள்ளிட்ட வாகனங்களைச் சாலையோரம் நிறுத்துவது வழக்கம்.
இதன்படி நேற்று சாலையோரம் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று அதிகாலை திடீரென சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர், கிண்டி மற்றும் திருவான்மியூர் ஆகிய இரண்டு தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த வீரர்கள் காரில் எரிந்திருந்த தீயை சிறிது நேரத்திலேயே அணைத்தனர். இதனால் பெரிய விபத்து எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் எரிந்த காரில் ஒன்று அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்குச் சொந்தமானது என்றும் மற்றொரு கார் உள்ளகரத்தை சேர்ந்த காந்திமதி என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
இந்த ஓட்டுநர் கோபி என்பவர் ஓட்டிவந்து பழவந்தாங்கலில் நிறுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காருக்கு மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா? அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!