Tamilnadu
தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குத் தடை விதித்து ஏன்?... அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கான தடையும், எலி பேஸ்ட்க்கு நிரந்தர தடையும் விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றபோது, தற்கொலைக்குக் காரணமான பூச்சி கொல்லி மருந்துகள் தடை செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும், உயிர் கொல்லி மருந்தான எலிக்கொல்லி பசை விற்பனையைத் தடை செய்யப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது 3 % மஞ்சள், பாஸ்பரஸ் உட்பொருளைக் கொண்ட எலி மருந்து பேஸ்ட்டை நிரந்தரமாகத் தடுக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அபாயகரமான Monocrotophos , Profenophos, Acephate , Profenophos+Cypermethrin , Chlorpyriphos+Cypermethrin, Chlorpyriphos உள்ளிட்ட 6 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு , 60 நாள் தடைக்கு வேளாண் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 6 மருந்தையும் ஒன்றிய அரசு மூலமே நிரந்தர தடை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
பூச்சி கொல்லி மருந்து உண்டது உட்பட அனைத்து வகையிலும் 2020-ல் தமிழ்நாட்டில் 16 ,883 தற்கொலைகள் நடந்துள்ளன. 104 என்ற எண்ணில் - ஆலோசனை மையம் மூலம் மாவட்டம் தோறும் மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!