Tamilnadu
மாண்டஸ் புயல் எதிரொலி.. 10 மாவட்டங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!
வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் தீவிர புயலாக மாறியது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டவிற்கு இடையே இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நேற்றில் இரவில் இருந்தே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
மாண்டஸ் புயல் எச்சரிக்கையை அடுத்து சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் கனமழையினை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்குத் தலைமைச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும். ஆனால் கடலோர பகுதிகளில் மட்டும் புயல் கரையைக் கடக்கும் நேரத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், பின்பும் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் மாண்டஸ் புயல் நாளை அதிகாலையில் கரையை கடக்கும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கனமழை காரணமாக சென்னை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!