Tamilnadu
சட்டையை கழட்டி காவலருக்கு மிரட்டல்.. வைரலான வீடியோ.. பாஜக மாவட்ட செயலாளர் அதிரடி கைது!
மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றி வருகிறது. இதில் தேர்தலில் வென்று ஆட்சியமைத்ததை விட எம்.எல்.ஏக்களை வாங்கி ஆட்சி அமைந்ததுதான் அதிகம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஆனால், அத்தகைய பாஜகவால் சீண்ட முடியாத மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். தமிழிசை வரை தற்போது அண்ணாமலை வரை பாஜக தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் கூட முன்னேற் முடியாமல் தவித்த வருகிறது. அதோடு கட்சியை வளர்க்க ரவுடிகள் முதற்கொண்டு கட்சியில் பாஜக சேர்த்து வருகிறது.
பல குற்றவழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் பாஜகவில் சேர்ந்ததும் அதிகாரம் கையில் இருக்கிறது என்கிற மிதப்பில் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக செய்தி அன்றாடம் செய்திகளில் வெளிவந்தவண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து காங்கேயம் நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறிய பாஜக நிருவாகி ஒருவருக்கும் பேருந்தில் இருந்த போலிஸார் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இருவரும் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு போலிஸார் சென்று பாஜக நிர்வாகியிடம் விசாரணை நடத்தியபோது அங்குவந்த பாஜக மாவட்ட பொதுசெயலாளர் ஜெகன், நகர தலைவர் சிவபிரகாஷ் மற்றும் பாஜக மாவட்ட செயலாளர் ராஜா உள்ளிட்டோர் பணியில் இருந்த போலிஸாரை நோக்கி ஒருமையில் பேசியுள்ளனர்.
அதோடு சட்டையை கழட்டி வைத்து விட்டு ஒத்தைக்கு ஒத்தை வா பாக்கலாம் என்றும் கூறி போலீஸாரை மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளிகி வைரலானது. இதனை பார்த்த பொதுமக்கள் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக செயலாளர் ராஜாவை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!