Tamilnadu
“ஆளுநரிடம் 21 மசோதாக்கள் கிடப்பில் உள்ளது; தெளிவாக விளக்கினோம்” : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்!
ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, உள்துறை மற்றும் சட்டத்துறை செயளர்களோடு ஆளுநரை சந்தித்ததாகும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார் .
21 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது என்றும், ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய முடியாது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த சந்திப்பில் ஆளுநர் கேட்ட விளக்கங்களை தெளிவாக நேரில் விளக்கினோம். ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும், சில சந்தேகங்கள் உள்ளது அதை பரிசீலித்த பிறகு ஒப்புதல் தருவதாக ஆளுநர் கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இருக்க கூடிய தடை சட்டங்கள் வாயிலாக ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம். ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் தந்தால் உடனடியாக அது நடைமுறைக்கு வந்துவிடும் என தெரிவித்தார்
Also Read
-
ஒரு ரூபாயை மறைத்தாலும் கூட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- தேவநாதனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
-
திரு.வி.க. நகர் & பெரியார் நகர் பேருந்து நிலையங்கள் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - அமைச்சர் பதில்!
-
”ஆதாரை ஏற்கத் தடுப்பது எது?” : தலைமை தேர்தல் ஆணையருக்கு 7 கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
செய்தியாளர்களிடம் அடாவடியாக நடந்து கொண்ட சீமான் : பொதுக்கூட்டத்தில் நடந்த பரபரப்பு!
-
”திமுகவையும் மாணவர்களையும் என்றைக்குமே பிரிக்க முடியாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!