Tamilnadu
பள்ளிக்கு செல்லும் போது நடந்த கொடூரம்.. தாய் கண்முன்னே மகள் பரிதாப பலி: சோகத்தில் மூழ்கிய குடும்பம்!
சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவேல். இவர் மனைவி நிஷாந்தி. இந்த தம்பதிக்கு சிஷ்திகா என்ற மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் இன்று வழக்கம் போல் மகளைத் தாய் நிஷாந்தி இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து இவர்களது இருசக்கர வாகனம் கரசங்கால் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது தனியார் நிறுவனத்தி பேருந்து ஒன்று இவர்களது வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதில் நிலைதடுமாறி தாயும், மகளும் கீழே விழுந்தனர். அப்போது பேருந்து சிறு சிஷ்திகா மீது ஏறியுள்ளது. இதில் சிறுமி பலத்த காயம் அடைந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் மகளின் நிலைகண்டு கதறி அழுதார். பிறகு அங்கிருந்த பொதுமக்கள் சிறுமியை மிட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைகேட்டு தாய் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தாய் கண்முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!