Tamilnadu
வீட்டில் திருடி வீட்டாரிடமே Lift கேட்டு தப்பிக்க முயன்ற வட மாநில இளைஞர்.. சிக்கியது எப்படி ?
ஆவடி அருகே வீடு புகுந்து திருடிய வட மாநில திருடன் ஒருவர், திருடப்பட்ட வீட்டாரிடமே Lift கேட்டு தப்பிக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிப்பட்டுள்ள நிகழ்வு அரங்கேறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (34). ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வரும் இவர், நேற்று காலை தனது மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கே நின்று கொண்டிருந்த வட மாநில இளைஞர் ஒருவர், வீடு பூட்டிக்கிடப்பதை பார்த்து பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கே பீரோவில் இருக்கும் சுமார் 7 சவரன் தங்க நகையை திருடிவிட்டு தப்பியோடியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து ஜெகன் திரும்பி வந்துகொண்டிருக்கும்போது, இந்த இளைஞர் அவரிடம் lift கேட்டுள்ளார். அந்த சமயத்தில் எதேர்ச்சியாக ஜெகன் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனே இதுகுறித்து ஜெகனுக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தனர். இதையடுத்து தன்னிடம் லிப்ட் கேட்ட நபரிடம் சந்தேகப்பட்டு விசாரித்தார்.
இதனால் அவர் பயந்து பதில் கூறியதால் அவரை சோதனை செய்துள்ளார். அப்போது ஜெகன் வீட்டில் இருந்த தங்க நகை, வெள்ளி கொலுசு உள்ளிட்டவைகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினரை அழைத்த ஜெகன், உடனே திருடனை பிடித்து பொதுமக்கள் அனைவரும் சரமாரியாக அடித்தனர்.
இதையடுத்து காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள், வட மாநில திருடனை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!