Tamilnadu

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்: மாணவர்களுடன் இறகுபந்து விளையாடி முதல்வர் அசத்தல்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23.11.2022) சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தீட்டி தோட்டம் மற்றும் வீனஸ் நகரில் 9.02 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டுத் திடல் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 38.98 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகள்

     கொளத்தூர், தீட்டி தோட்டம் முதல் தெருவில் 1.27 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மேலும், வீனஸ் நகரில் 7.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய திட்டப் பணிகள் 

வீனஸ் நகர், ஜெயந்தி நகர் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு
19.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் திட்டம் மற்றும் உந்து நிலையம் அமைக்கும் பணி; ஜம்புலிங்கம்  பிரதான வீதியில் இருந்து  குமாரப்பா சாலை வரை 37 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர்  குழாய் அமைக்கும் பணி; ஜி.கே. எம். காலனி 24வது தெருவில் இருந்து பெரியார் நகர் நீரூற்று நிலையம் வரை 97 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி;

 கொளத்தூர், பந்தர் கார்டன்,  பெருநகர சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு மற்றும் நவீன வசதிகளுடன் பள்ளியை மேம்படுத்தும் பணி;  

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், பள்ளி சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 4.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டும் பணி;

கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து 8.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல்லவன் சாலையில் அமைந்துள்ள நியாய விலைக்கடைக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, தீட்டித் தோட்டம் 4வது தெருவில் அமைந்துள்ள இரவு காப்பகம், பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம், குருசாமி தெருவில் அமைந்துள்ள ஜார்ஜ் காலனி பூங்கா, பல்லவன் சாலையில் அமைந்துள்ள கே.கே.ஆர் அவென்யூ பூங்கா ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள்;

ஜவஹர் நகர் முதலாவது வட்ட சாலையில் அமைந்துள்ள இறகு பந்து மைதானத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி, பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள மீர்ஷாஜித் உசேன் பூங்கா, ஜெய்பீம் நகர் முதல் தெருவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், ஜெய்பீம் நகர் 12வது தெருவில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடம், கென்னடி சதுக்கம் முதல் தெருவில் அமைந்துள்ள கென்னடி சதுக்க பூங்கா, ஜவஹர் நகர் 2வது வட்ட சாலையில் அமைந்துள்ள குழந்தைகள் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள்;

கோட்டம்-66, 67 மற்றும் 68க்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில்
மின்விளக்குகள் அமைக்கும் பணி, கோட்டம்-68 மற்றும் 70க்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி, ஜவஹர் நகர் 3வது வட்ட சாலையில் அமைந்துள்ள வார்டு அலுவலகம், ராஜா தெருவில் அமைந்துள்ள சமுதாய நலக் கூடம், சீனிவாச நகர் 3வது தெருவில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி, ஆர்.கே. சிண்டிகேட் நகரில் உள்ள பூங்கா ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள்;

சீனிவாசா நகர் 3வது தெரு மற்றும் திருவீதி அம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் அமைந்துள்ள சென்னை ஆரம்ப பள்ளிகளில் பெண்களுக்கான கழிவறை கட்டும் பணி, எஸ்.ஆர்.பி. கோயில் குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, எஸ்.ஆர்.பி. கோவில் குளத்தினை சுற்றி கைப்பிடி அமைக்கும் பணி,  பி.யூ. சண்முகம் பூங்கா, சீனிவாச நகர் 3வது தெருவில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அஞ்சுகம் நகர் 4வது தெருவில் அமைந்துள்ள உதவி பொறியாளர் அலுவலகம், பூம்புகார் நகர் பூங்கா, திருவீதி அம்மன் கோயிலில் உள்ள சென்னை ஆரம்ப பள்ளி, சோமையா தெருவில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம், ஜி.கே. எம் காலனி பிரதான சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள்;

சோமையா தெருவில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் நவீன சமையற்கூடம் கட்டும் பணி, ஜி.கே.எம். காலனி 14வது தெருவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகம், லோகோ ஸ்கீம் சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், கபிலர் தெருவில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம், ஜகன்நாதன் தெருவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் ஆகியவற்றை  மேம்படுத்தும் பணிகள்;

ஜகன்நாதன் தெருவில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் கூடுதல் அறைகள் கட்டும் பணி மற்றும் மின்வசதிகள் ஏற்படுத்தும் பணி, கோட்டம்-64 மற்றும் 65க்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி, கோட்டம்-65 மற்றும் 69க்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி ஆகிய 37 பணிகள்;

என மொத்தம் 38.98 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.      முன்னதாக, பந்தர் கார்டன் மற்றும் பள்ளி சாலை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்களையும், மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.

Also Read: “அதிகாரிகள் இந்த 5 கட்டளைகளை நினைவில் வையுங்கள்” - கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தல்!