Tamilnadu
குளத்தில் மிதந்த இரண்டு சகோதரர்கள் உடல்.. பதறியடித்து ஓடிவந்த பெற்றோர்: நடந்தது என்ன?
விருதுநகர் மாவட்டம் , அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம் பட்டியைச் சேர்ந்தவர் சரத்குமார். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியம்மாள். இந்த தம்பதியருக்குச் சந்திரமணி (7), சித்தார்த்(8) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இதில் சந்திரமணி அருகில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பும், சித்தார்த் நான்காம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும் சகோதரர்கள் இருவரும் அருகிலுள்ள பாப்பாவி குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.
இதையடுத்து பள்ளி முடிந்தும் நீண்ட நேரம் ஆகியும் பிள்ளைகள் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். அப்போது குளத்தில் சித்தார்த் சடலமாக மிதப்பதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அவர்களது பெற்றோர்களுக்கும், போலிஸாருக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இருவரது உடலும் சடலமாக மீட்கப்பட்டது. தங்கள் குழந்தைகள் இறந்த உடலைப்பார்த்துப் பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்கடித்தது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!
-
“2026 முதல் தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் தொடங்கப்போகிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!