Tamilnadu
குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்.. 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்ட மீட்புக்குழுவினர் !
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட அலுமினிய பாத்திரத்தை குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இன்றி மீட்புக்குழுவினர் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.
மதுரை மாவட்டம், சிம்மக்கல் பகுதியில் உள்ள மணிநகரம் முதல் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருக்கு 2 வயதில் அஸ்வினி என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், அந்த குழந்தை நேற்று வீட்டில் பாத்திரத்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக அதில் ஒரு அலுமினிய பாத்திரத்தை குழந்தை தனது தலையில் மாட்டிக்கொண்டது. பிறகு அதை குழந்தை எடுக்க முயற்சித்தும் வெளியே வரவில்லை. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த சிறுமியை கண்ட பெற்றோர் பதற்றமானர். மேலும் அவர்களும் சிறுமியின் தலையில் இருந்த பாத்திரத்தை எடுக்க முயன்றனர். அப்போதும் அதை எடுக்க முடியவில்லை.
இதையடுத்து அக்கம்பக்கத்தினரை வரவழைத்து எடுக்க முயன்றனர். அப்போதும் அது தோல்வியை சந்தித்ததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், சிறுமியின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை எடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
அப்போதும் அது உடனடியாக எடுக்க முடியவில்லை. இறுதியாக தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை வெட்டி, சிறுமிக்கு எந்த வித பாதிப்பும் இன்றி வெளியே எடுக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் தீவிர முயற்சிக்கு பிறகு சிறுமியின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை எடுத்தனர்.
இதையடுத்து குழந்தையின் பெற்றோருக்கு சிறுவர்கள் முன்பு இதுபோன்ற பாத்திரங்கள் வைக்க கூடாது என்றும், அவர்கள் கையில் விளையாட்டு பொருள் போல் இதனை கொடுக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!