Tamilnadu
குளத்தில் மூழ்கி சிறுமி, இளம் பெண் பலி! தாய் இறந்த 8 வது நாளே மகள் உயிரிழந்த சோகம்!
தூத்துக்குடி மாவட்டம், நயினார் புரத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி சண்முத்தாய். இந்த தம்பதிக்குச் சுடலைக்கனி, வள்ளி, திவ்யதர்ஷினி என மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 30ம் தேதி சண்முகத்தாய் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கடந்த சனிக்கிழமையன்று சண்முகத்தாய் இறப்பு சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.
இதில் உறவினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது உயிரிழந்த சண்முத்தாயின் மகள்கள் மற்றும் உறவினர்கள் அருகே உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது உறவினர்களின் சிறுமி கோகிலா என்பவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சண்முத்தாயின் மகள் சுடலைக்கனி தண்ணீருக்குள் இறங்கி சிறுமியைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் இருவருமே குளத்திற்குள் இருந்த சேற்றில் சிக்கியுள்ளனர்.
பின்னர், பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு உடனே தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கித் தேடினர். பிறகு இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். தாய் இறந்த எட்டாவது நாளே மகளும், அவரது உறவினர் சிறுமியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!