Tamilnadu
பயணி தவறவிட்ட தங்க Bracelet.. போலிஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்குக் குவியும் பாராட்டு!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் ரகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவரது ஆட்டோவில் ஏறியவரைச் சோழபுரம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து ஆட்டோவை ஓட்டிச் சென்றுவிட்டார். இதையடுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் பயணிகள் அமரும் சீட் பகுதியை துடைத்துள்ளார்.
அப்போது, தங்கநகை ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் உடனே சோழபுரம் காவல்நிலையம் சென்று நடந்தவற்றைக் கூறி அந்த நகையை போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் போலிஸார் அவரது ஓட்டோவில் பயணம் செய்த விவரங்களைக் கண்டுபிடித்தனர்.
பிறகு நகையை தவற விட்ட நபரை போலிஸார் கண்டுபிடித்து அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு காவல் நிலையம் வந்த அவரிடம் அடையாளங்கள் சரியாகக் கூறியதை அடுத்து போலிஸார் ஒப்படைத்தனர். ஆட்டோவில் பயணி தவறவிட்ட தங்கை நகையை பத்திரமாக போலிஸாரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் கிருஷ்ணனை பலரும் பாராட்டிவருகின்றனர்.
Also Read
-
மீண்டும் மீண்டும் மக்களை அவதிக்குள்ளாக்கும் த.வெ.க : வரவேற்பு கொண்டாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்!
-
“இன்று மகளிரின் நம்பிக்கையாக திகழும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” : முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
ரூ.1000 வரவு வைத்தது தவெக அரசு : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே நிலைத்து நிற்கும்!
-
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல”: மீண்டும் பிற்போக்குவாதிகளை கதறவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
-
அ.தி.மு.க ஆதரவு : “ஊழல் சக்திகள் தயவில் விஜய் ஆட்சி!...” -வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!