Tamilnadu
உசிலம்பட்டி அருகே வானில் தெரிந்த மர்ம உருவம்.. எலான் மஸ்கின் சாட்டிலைட்? : உண்மை என்ன?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நேற்று இரவு திடீரென வானில் வெள்ளை நிறத்தில் நீண்ட கோடுகள் போன்று வித்தியாசமான உருவம் தெரிந்துள்ளது. இதைப்பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துள்ளனர்.
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வானில் தோன்றி சிறிது நேரத்திலேயே அந்த கோடுகள் மறைந்து விட்டது. மேலும் வட இந்தியாவிலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இதோ போன்று வானில் காட்சியளித்துள்ளது.
ஆனால் அந்த உருவம் என்ன என்று தெரியவில்லை. மேலும் உலகின் பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்டார்லைட் சாட்டிலைடாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்கின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் டூலும் பொதுமக்களை விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
2021ம் ஆண்டு தொழிலதிபர் ஜாரிட் ஐசக்மேன், மருத்துவர் ஹேலே ஆர்சனாக்ஸ், அமெரிக்க விமானப்படை முன்னாள் வீரர் கிறிஸ் செம்ப்ரோஸ்கி, புவிஅறிவியல் வல்லுநர் சியான் பிராக்டர் ஆகிய 4 பேரும்தான் 3 நாட்கள் பூமியை பூமிக்கு அப்பாலிருந்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே தெரிந்த மர்ம உருவம் எலான் மஸ்கின் ஸ்டார்லைட் சாட்டிலைடாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம் - கிடப்பில் போடப்பட்ட கீழடி அறிக்கை : முரசொலி!
-
”பிறக்கின்ற புத்தாண்டு 2026 - அது திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திடும் ஆண்டு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
பொத்தென்று மயங்கி விழுந்த அதிமுக மாவட்டச் செயலாளர்... கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டிருந்த பழனிசாமி! - video
-
“பழனிசாமியின் முகவர்... அதிமுகவின் B டீம்...” - அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி!
-
தமிழ்நாடு அரசின் Iconic Projects... அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு... விவரம்!