Tamilnadu
“கோவை சம்பவம் - ஆளுநர் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துக்களை சொல்கிறார்” : சபாநாயகர் அப்பாவு ஆவேசம்!
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தமிழக ஆளுநர் எந்த ஆதாரங்களுடன் கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது தெரியவில்லை. அதுபோன்று தேசிய புலனாய்வு முகமையும் பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து முபீனுக்கு பயிற்சி அளித்தாக உறுதிப்படுத்தப்படாத தகவலும் பேசப்பட்டு வருவதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள குமந்தான் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து கடந்த 23- ந்தேதி அனுமன் நதியில் ஏற்பட்ட காற்றாட்டு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு இரண்டு பெண்குழந்தைகள் இருவரும் பள்ளியில் படித்து வரும் நிலையில், இசக்கிமுத்துவின் குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 4 லட்சம் ரூபாய் நிவரணம் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இசக்கிமுத்துவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பாத்தாரிடம் நிவாரண நிதியை வழங்கினார். மேலும் இரண்டு குழந்தைகளின் படிப்பிற்கான செலவை தானே ஏற்றுக் கொள்வதாவும் அவர்களிடம் உறுதி அளித்தார்
இதனைத் தொடர்ந்து அவர் செய்நியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “முதல்வர் அறிவித்த நிவாரணத்தொகை இசக்கிமுத்துவின் குடும்பத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பாக இருக்கும். கோவை குண்டுவெடிப்பு சம்பந்தமாக ஆளுநர் எந்த ஆதாரங்களுடன் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார் என்பது தெரியவில்லை.
நானும் ஆளுநரும் பொதுவான நபர்கள்தான், ஆளுநர் தடயங்கள் அளிக்கப்பட்டு இருப்பதாக பொதுவெளியில் கருத்துக்களை வெளியிட்டு இருக்க வேண்டாம். அதனை தவிர்த்து இருக்கலாம் தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் இருந்தால் ஆளுநர், தமிழக அரசிடம் அதனை தெரிவித்து அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருக்கலாம்.
ஏற்கனவே ஆளுநர் தமிழக அரசு கோயமுத்தூர் கார் வெடிப்பு சம்பவத்தில் விரைவாக செயல்பட்டு இருப்பதாக பாராட்டு தெரிவித்து இருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது ஆலயத்தில் நடந்த வெடி விபத்து சம்பந்தமாக திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தற்போது கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபினை சந்தித்து தேசிய புலனாய்வு முகமை அவரை விசாரித்து அதன் பின் விட்டு விட்டார்கள்.
பாரதிய ஜனதா கட்சியும் தேசிய புலனய்வு முகமையும் இணைந்து தான் முபினுக்கு பயிற்சி கொடுத்தவருவதாக, கூட உறுதிப்படாத தகவல்கள் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது. அதேபோல் தான் ஆளுநரின் கருத்தும் இருப்பதாக நான் கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!