Tamilnadu
“பாஜக அழைப்பு விடுத்துள்ள பந்த் சட்டவிரோதமானது; தடை விதிக்க வேண்டும்” : ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல்!
கார் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக பாஜக அழைப்பு விடுத்துள்ள பந்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரம் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பா.ஜ.க சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், பந்த் அன்று தங்களது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைத்து வியாபாரிகள் பந்துக்கு ஆதரவு தருமாறு பா.ஜ.க நிர்வாகிகள் அழுத்தம் தருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் மாநில அரசை குற்றம்சாட்டி பந்த் நடத்துவது தேவையற்றது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே வரும் திங்கட்கிழமை பா.ஜ.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பந்த்-க்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு விசாரிப்பதாக தெரிவித்தனர்
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!