Tamilnadu
பட்டாசை பாதுகாத்துக்குங்க.. தீபஒளி திருநாளன்று வெளுத்து வாங்கப்போகும் மழை: வானிலை மையம் எச்சரிக்கை!
தீபஒளி திருநாள் பண்டிகை வரும் 24ம் தேதி நாடுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காகப் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்கி தீபஒளி திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 24ம் தேதி வாக்கில் புயலாக மாறும் என்பதால் தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் இன்று நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23ஆம் தேதிவாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும்.
பிறகு வடதிசையில் நகர்ந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் 24ஆம் தேதி வாக்கில் புயலாக வலுபெறக்கூடும். பிறகு 25ஆம் தேதிவாக்கில் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இதனால் இன்று முதல் 25ம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லோசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 24ம் தேதி தீபஒளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்கனை சோகமடைய செய்துள்ளது.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!