Tamilnadu
மதுரை To சென்னை - அதிவிரைவில் சென்று சாதனை படைத்த வைகை எக்ஸ்பிரஸ் ! பழைய சாதனை தகர்ப்பு !
பொதுவாக ஒரு ஊரில் இருந்து மற்ற ஊருக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்கும் போக்குவரத்தில் ஒன்று தான் இரயில். இரயிலில் பயணித்தால் எந்த வித தடையும் இன்றி, குறித்த நேரத்தில் பயணிக்க முடியும் என்று பயணிகள் நம்புகின்றனர்.
சென்னையில் இருந்து மதுரைக்கு சுமார் 15 இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் 'வைகை எக்ஸ்பிரஸ்'. கடந்த 1977 ஆண்டு அறிமுகம்படுத்தப்பட்ட இரயில் தான் 'வைகை எக்ஸ்பிரஸ்'.
இது தற்போது தினமும் மதுரையிலிருந்து காலை 7.10-க்கு புறப்பட்டு பகல் 2.30 மணிக்கு சென்னைக்கு வந்தடைகிறது. அதே போல் சென்னையிலிருந்து பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15-க்கு மதுரை சென்றடையும்.
இந்த நிலையில், சுமார் 7 மணி 20 நிமிடங்கள் பயணிக்கும் இந்த இரயிலின் பயண நேரத்தை குறைத்து தற்போது வெறும் 6 மணி நேரம் 34 நிமிடங்களில் சென்று சாதனை படைத்துள்ளது. அதாவது சுமார் 46 நிமிடங்களுக்கு முன்பாகவே தனது இலக்கிற்கு சென்று சாதனை செய்துள்ளது.
கடந்த அக்.15ம் தேதி மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய வைகை ரயில், தவிர்க்க முடியாத காரணங்களால் 30 நிமிடங்கள் காலதாமதமாக 7.40க்கு புறப்பட்டது.இருப்பினும், சென்னைக்கு மதியம் 2.14 மணிக்கு சென்றடைந்து விட்டது. அவ்வகையில் மதுரை - சென்னை இடையேயான 497 கி.மீ. தூரத்தை 11 நிறுத்தங்களுடன் 6 மணி 34 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.
Also Read
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாடிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!