Tamilnadu
“ShareChat-ல் 1.8 லட்சம் மக்களின் இதயங்களை தொட்ட கலைஞர் செய்திகள்” : சாதனையை அங்கீகரித்த ShareChat !
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை கடந்த 2019ம் ஆண்டும் ஏப்ரல் 26ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
குறுகிய காலத்தில் உருவான கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று முகநூல், ட்விட்டர், யூடியூப், ஷேர்சாட் என பல்வேறு சமூக வலைதளங்களில் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது.
அரசியல் பணிகளைப்போலவே, மக்களுக்கு முறையான செய்திகளை வழங்கும் சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்துக்கொண்டு செயல்படுகிறது. அந்த வகையில், கழக செய்திகள், தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் அமைச்சர்களின் பேட்டி உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களில் கொண்டுச் செல்லும் பணியை கலைஞர் செய்திகளின் சமூக வலைதளம் மற்றும் இணையதளம் சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் குறுகிய காலத்தில் ஷேர்சாட் செயலியில் 1.8 லட்சம் Followers சேர்த்துள்ளது கலைஞர் செய்திகள். கலைஞர் செய்திகள் இத்தகைய சாதனையை அங்கீகரிக்கும் விதமாக கலைஞர் செய்திகள் டிஜிட்டலுக்கு, டிராபி வழங்கிய கவுரவித்துள்ளது Sharechat நிறுவனம்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வந்த ஷேர்சாட் நிர்வாகிகள், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவுத் தலைவர் ப. திருமாவேலன் அவர்களிடம் சில்வர் டிராபியை வழங்கினர். அப்போது நிகழ்ச்சி தயாரிப்புத் தலைமை தான்யராஜூ, டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மோகன் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள் #kalaignarseithigal
Facebook : https://www.facebook.com/kalaignarnew...
Twitter : https://twitter.com/Kalaignarnews
Youtube : https://www.youtube.com/kalaignartvne...
Instagram: https://www.instagram.com/kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal https://play.google.com/store/apps/de....
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!