Tamilnadu
தின்பண்டம் என நினைத்து விசிலை விழுங்கிய குழந்தை.. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்!
சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி வனஜா. இந்த தம்பதிக்கு தர்சன் என்ற 3 வயது மகனும், கயல்விழி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கயல்விழி அங்கிருந்த விசிலை எடுத்து தின்பண்டம் என நினைத்து விழுங்கியுள்ளது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் திணறியுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் வனஜா குழந்தையை உடனே தூக்கிக் கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்குச் சென்றார். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடும் போது தின்பண்டம் என நினைத்துத் தவறுதலாக விசிலை விழுங்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!