Tamilnadu
நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்.. அந்தரத்தில் தொங்கிய பேருந்து: பாம்பன் பாலத்தில் திக் கிக் நிமிடங்கள்!
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, இன்று காலை பாம்பன் பாலத்தில் விபத்துக்குள்ளானது. முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்த முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முன்னதாக விபத்து ஏற்படுவதை அறிந்து, சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றார். ஆனால் பேருந்து, பாலத்தின் பக்கவாட்டு சுவரை இடித்துக்கொண்டு கடலில் விழாமல் பேருந்து அந்தரத்தில் தொங்கி நின்றது.
பின்னர் பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கினர். இதுபற்றி தகவல் அறிந்த வந்த போலிஸார், பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் பேருந்தை மீட்டனர். இதையடுத்து விபத்திற்குள்ளான பேருந்துகள் அங்கிருந்து அகற்றப்பட்டது.
இந்த விபத்தில் 5 பேர் படுயாகம் அடைந்துள்ளனர். பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரிக்கும் பொதுமக்களின் ஆதரவு : ஆகஸ்ட்டில் 99.09 லட்சம் பேர் பயணம்!
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!