Tamilnadu

இப்படி ஒரு மரணமா ? கால் வழுக்கி கொதிக்கும் எண்ணெயில் விழுந்து மீன் வியாபாரி பலி.. சென்னையில் அதிர்ச்சி !

மரணம் என்பது யாராலும் கணிக்கமுடியாதது. அது எப்போது நிகழும், எதனால் நிகழும் போன்ற ஏதும் நமது கைகளில் இல்லை. அதனால்தான் முன்னோர்கள் பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, வயல் வரப்பு வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு என்று கூறினர்.

இந்த நிலையில், தற்போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி எண்ணை பாத்திரம் மீது விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிலும் இந்த சம்பவம் தமிழ்நாட்டில்தான் நடந்துள்ளது. தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வைகறை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது40). இவர் அதே பகுதியில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் இன்று இரவு அந்த பகுதியில் தான் வழக்கமாக செல்லும் டீ கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். டீ குடித்தவர் கடையில் இருந்து வெளியே வந்தபோதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. திடீரென கால் வழுக்கியதில் அருகில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் விழுந்து அலறி துடித்துள்ளார்.

இதைத் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் பலத்த தீக்காயம் அடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பீர்க்கன்கரனை போலிஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: "பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பு ஒட்டுமொத்த நாட்டையே நாசமாக்கிவிடும்" - ப.சிதம்பரம் எச்சரிக்கை !