Tamilnadu
"இந்த நாடே தலைவர் மு.க.ஸ்டாலின் வழி நடத்தலை எதிர்பார்க்கிறது".. பொதுக்குழு கூட்டத்தில் கனிமொழி MP பேச்சு!
சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன்சென்டரில்” நடைபெற்று வரும் தி.மு.க பொதுக்குழுவில் 2வது முறையாக ஒருமனதாக மீண்டும் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு கனிமொழி எம்.பி பேசுகையில், " 1949 லில் கழகத்தைத் தொடங்கிய போது அண்ணா அவர்கள் இந்த கழகத்தின் செயல்கள் பெரியாரே போற்றும் வகையில் இருக்க வேண்டும் என்றார் .
அதேபோல் சுயமரியாதை திருமணச் சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம் என பெரியாரே போற்றும் வகையில் செயல்பட்டார் அண்ணா. அவருக்கு அடுத்துப் பொறுப்பேற்ற கலைஞர் கழகத்தின் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து செயல்பட்டார்.
பின்னர் கலைஞருக்குப் பிறகு வெற்றிடம் என நினைத்த பலரின் ஆசையைப் பொய்யாக்கும் வகையில் வெற்றிடத்தைக் காற்றாக இல்லாமல் ஆழிப்பேரலையாக நிரப்பியிருக்கிறார் தலைவர் மு.க.ஸ்டாலின். ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரசியல் வெற்றியைப் பெற்று இன்று சனாதன சக்திகளிடம் இருந்து கொள்கையைக் காக்கப் போராடி வருகிறார்.
இந்தப் போராட்டத்தில் இணைந்துப் போராட வாய்ப்பளித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞர் இல்லாத இடத்தில் நாங்களும் இந்த நாடும் உங்களை வைத்துப் பார்க்கிறது. உங்களின் வழிநடத்தலை இந்த நாடு எதிர்ப்பார்க்கிறது" என தெரிவித்தார்.
Also Read
-
வரி விதிப்பு விவகாரம் : “வராக்கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்” - சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்!
-
“Oxford பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் திருவுருவப்படம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“கழகத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து, 13 முறை சிறை சென்றவர் குளித்தலை அ.சிவராமன்” : முதலமைச்சர் இரங்கல்!
-
ராகுல் பயணம் : “பீகாருக்கான எழுச்சி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கான எழுச்சி” - முரசொலி தலையங்கம்!
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!