Tamilnadu
தி.மு.க பொதுக்குழுக் கூட்டம்.. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு: புகைப்படத் தொகுப்பு இங்கே!
சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன்சென்டரில்” நடைபெற்று வரும் தி.மு.க பொதுக்குழுவில் 2வது முறையாக ஒருமனதாக மீண்டும் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு நியமனம் செய்து தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் நியமனம் செய்து தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல் துணைப் பொதுச் செயலாளராகக் கனிமொழி எம்.பி. புதிதாக நியமனம் செய்து தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த கூட்டத்தின் புகைப்படத் தொகுப்பை இங்கு நாம் பார்ப்போம்.
Also Read
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!