Tamilnadu
தி.மு.க பொதுக்குழுவில் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி. நியமனம்.. முழு நிர்வாகிகள் பட்டியல் இதோ!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகுதியுள்ள ஒன்றிய - நகர - நகரிய - பேரூர் - பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய புதிய பொதுக்குழுக் கூட்டம் இன்று பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன்சென்டரில்” நடை பெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் கழகத்தின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகமது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு, தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் நியமனம் செய்து தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல் துணைப் பொதுச் செயலாளராகக் கனிமொழி எம்.பி. புதிதாக நியமனம் செய்து தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
Also Read
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !
-
‘அன்புக்கரங்கள்' திட்டம் : கருணையின் முதல்வராகக் காட்சி தருகிறார் மு.க.ஸ்டாலின்... முரசொலி புகழாரம் !
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !