Tamilnadu
குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? .. TNPSC அறிவித்தது என்ன?
தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான TNPSC குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு நடைபெற்றது. அதேபோன்று, ஜூலை 24 ஆம் தேதி காலியாக உள்ள 7,138 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள். எனவே குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் TNPSC சார்பில் அக்டோபர் மாதத்தில் குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்படும் என புதிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.
அதேபோல் அக்டோபர் மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வுகள் வெளியிடப்படும் என புதிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?