Tamilnadu
அண்ணன் முன் நடித்து காட்டியபோது தூக்கு கயிற்றில் சிக்கிய சிறுவன்.. விளையாட்டு வினையான சோகம்..
சென்னை புழல் அடுத்த காமராஜர் நகர் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் இளையமகன் கார்த்திக் (வயது 11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் இரவு கார்த்திக்கும் அவரது அண்ணனும் இணைந்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது தூக்குபோட்டு விளையாடுவது போல் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு விளையாடியுள்ளனர்.
அப்போது அவரது அண்ணன் வெளியே நின்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார்த்திக் தூக்கு கயிறில் சிக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார். பின்னர் இதனைக்கண்ட அவரது அண்ணன் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.
பின்னர் அவர்கள் வந்து போலிஸாருக்கு இது தொடர்பாக தகவல் அளித்துள்ளனர். அதன் படி அங்கு வந்த போலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!