Tamilnadu
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்கள்.. தர்ம அடி கொடுத்த மக்கள்: விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேளச்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வேலைபார்த்து வருகிறார். இந்த குடியிருப்பில் மேலும் பல பெண்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இளம் பெண் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் குளியல் அறை அருகே நின்று கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார்.
பின்னர் அங்கு கூடிய பொதுமக்கள் 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். இதனால் அவர்களின் செல்போன்களை காட்டும்படி பொதுமக்கள் கூறினார்.
ஆனால் அவர்கள் செல்போன்களை கடுக்க மறுத்து உடனே அதிலிருந்து சில வீடியோக்களை அழித்துள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் 2 வாலிபர்களையும் வேளச்சேரி போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பிறகு போலிஸார் அவர்களது செல்போனை ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் மீண்டும் எடுத்துப் பார்த்தபோது அதில் பெண்கள் குளிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், ஸ்ரீராம் என்பது தெரியவந்தது. மேலும் வீடியோக்களை இணையதளத்துக்கு விற்கவும், தனிமையில் இருக்கும்போது பார்த்து ரசிக்கவும் எடுத்ததாக வாலிபர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து 2 வாலிபர்களிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!