Tamilnadu
இன்புளூயன்சா காய்ச்சல்.. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா? : அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது என்ன?
தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "பருவ மழைக்கு முன்னால் வரும் காய்ச்சல் குழந்தைகளுக்கு வரக்கூடியது தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்ததால் காய்ச்சல் பாதிப்பு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் எப்போதும் ஏற்படக்கூடிய பாதிப்பு தான் தற்பொழுது ஏற்பட்டு இருக்கிறது.
இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் influenza காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாகத் தமிழ்நாட்டில் 965 பேர் influenza காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
குழந்தைகளுக்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. அதேபோல பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியம் இல்லை மருந்து சீட்டு இல்லாமல் எந்த மருந்தும் கொடுக்கக் கூடாது என்று மருந்துக் கடைகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது அதேபோல பொதுமக்களும் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்துகள் வாங்கக் கூடாது" என தெரிவித்தார்.
Also Read
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !