Tamilnadu
நீச்சல் தெரியாத நண்பனை ஏரியில் குளிக்க வற்புறுத்தியதால் நடந்த சோகம்: விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!
சென்னை அடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இளைஞரான இவர் கோவூர் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமையன்று ஜெகதீசன் தனது நண்பர்கள் சூர்யா, யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரிக்குச் சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் ஏரியில் இறங்கிக் குளித்துள்ளனர்.
மேலும் நீச்சல் தெரியாத ஜெகதீசன் படியில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை நண்பர்கள் நீச்சல் அடிக்கும்படி வற்புறுத்தி ஏரியில் இறக்கியுள்ளனர்.
அப்போது அவருக்கு நீச்சல் தெரியாததால் ஏரியில் மூழ்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்கப் போராடியுள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலிஸார் ஏரியில் ஜெயதீசன் உடலை தேடினர்.
பின்னர் நீண்ட நேரத்திற்குப் பிறகு ஜெகதீச உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் தெரியாமல் பள்ளி மாணவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பீகார் தேர்தலில் தேஜஸ்வி புகழாரம்!
-
ராணிப்பேட்டை - 72,880 நபர்களுக்கு ரூ.296 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
35 மீனவர்கள் கைது : ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தருமபுரி - ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!