Tamilnadu

ஒரேநாளில் 11 கிலோ தங்கம் கடத்தி வந்த 55 பயணிகள்.. விமான நிலையத்தில் நடந்த சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ ஏர் ஏசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஸ்கூட் ஏர்வேஸ் உள்ளிட்ட விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த விமானங்களில் பயணம் செய்த சுமார் 60 பேர் மீது சந்தேகம் ஏற்படும் நிலையில் அவர்களை தனியே அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொருவரிடமிருந்தும் சுமார் 200 முதல் 500 கிராம் வரை தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னர், 55 பயணிகளிடம் இருந்து 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலும் இரண்டு நபர்கள் தங்கத்தை வயிற்றில் மறைத்து எடுத்து வந்ததாக தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர்களிடமும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சோதனை மேற்கொண்ட மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீரென விமான நிலையத்தில் சோதனை மேற்கொள்வது வாடிக்கை இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் குறித்து அதிகாரிகள் விரைவில் அறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருச்சி விமான நிலையம் பகுதியில் நேற்று காலை முதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: துப்பாக்கி சுடாததால் உயிர் தப்பிய அர்ஜெண்டினா துணை அதிபர்.. மக்கள் முன்னிலையில் நடந்த பகீர் சம்பவம்!