Tamilnadu
WhatsApp-ல் மனைவி அனுப்பிய புகைப்படம்.. திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கணவன் : நடந்தது என்ன ?
திண்டுக்கல் மாவட்டம், வட மதுரை அருகே உள்ள எட்டிக்குளத்துபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு வீரழகு என்ற பெண்ணுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்குக் குழந்தைகள் இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து வீரழகு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன் ஆனந்தின் செல்போன் வாட்ஸ் ஆப்பிற்கு மனைவி வீரழகு ஒரு புகைப்படம் அனுப்பியுள்ளார். இந்த படத்தில் வீரழகு வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும், நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். தன்னை இனிமேல் தேடி வர வேண்டாம் என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து ஆனந்தன் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் மனைவியை மீட்டுத்தரும்படி ஆனந்த் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மனைவி மீது முதல் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!