Tamilnadu
"உங்களை உயர்த்தியது கலைஞர் கொண்டுவந்த சமூகநீதிதான்" -அண்ணாமலைக்கு பாடம் எடுத்த கார்த்திகேய சிவசேனாபதி !
திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை நோக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் "1974-ம் ஆண்டுக்கு பிறகு கொங்குபகுதியில் என்னை போல ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பலரை, உங்களை போன்ற அதிகாரிகளாக உயர் இடத்துக்கு அழைத்துச்சென்றது, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டுவந்த சமூகநீதிதான். 1974-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்ற அந்தஸ்தையும், கொங்கு வேளாளர் என்ற வார்த்தையையும் கலைஞர் அளித்தார்.
தி.மு.க அரசு கொண்டுவந்த இட ஒதுக்கீட்டில் படித்து நீங்கள் மேல்நிலைக்கு செல்லவில்லை என நிரூபித்தால், தி.மு.க.வினர் யாரும் இட ஒதுக்கீடு குறித்து பேசமாட்டோம்.12-ம் வகுப்பு, பொறியியல் கல்வி, உயர்கல்வி, ஒன்றிய அரசு தேர்வாணைய விண்ணப்பங்களில், நீங்கள் ’கொங்கு வேளாளர்’ என்பதை குறிப்பிட்டீர்களா? ’கொங்கு வேளாளர் எனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்’ என்ற இடஒதுக்கீட்டை பயன்படுத்தி கொண்டீர்களா இல்லையா என்பது எங்கள் கேள்வி.
பயன்படுத்தவில்லையென்றால், அதற்கான ஆதாரங்களை பதிவிடுங்கள். ஆனால், இடஒதுக்கீடு மூலமாக படித்து முன்னேறி இருந்தால், தி.மு.கவுக்கு நன்றி சொல்லுங்கள். அதை விடுத்து சமூக வலைதளங்களில் தனி மனித தாக்குதல்,தரக்குறைவானவற்றை பதிவிடுவதை நிறுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.
அவரின் இந்த வீடீயோவை உடன்பிறப்புகளும், இணையவாசிகளும் கொண்டாடி வருகின்றனர். அதில் பதிவிட்டுள்ள பலர், இது போன்ற கேள்விகளுக்கு அண்ணாமலை எப்படியும் பதில் சொல்ல மாட்டார் என்று கூறி வருகின்றனர்.
Also Read
-
”பாஜகவின் ஊதுகுழலாக உள்ள பழனிசாமியை 2026ல் மக்கள் அடித்து விரட்டுவார்கள்” : அமைச்சர் ராஜேந்திரன் உறுதி!
-
மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?