Tamilnadu

”எல்லோருக்குமான அரசாக செயல்படும் 'திராவிட மாடல்' அரசு”: கனிமொழி MP புகழாரம்!

தூத்துக்குடி மாவட்டம் திரு வைகுண்டம் அருகே உள்ள இருவப்பபுரம் கிராமத்தில் விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தின் 150 ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தி.மு.ககுழு துணைத் தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய கனிமொழி எம்.பி.,"விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வந்த அரசுதான் தி.மு.க அரசு. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கான கடன்களும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கான தனி பட்ஜெட் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் கருத்துக்களும், விவசாயிகள் கருத்துக்களும், தொழிலாளர்கள் கருத்துக்களும், அடிமட்ட மக்களின் கருத்துகளையும் கேட்டு செயல்படுத்தக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. எல்லோருக்குமான அரசாக தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தற்போது தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெறும்போது விவசாயிகள் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். தெரிவித்தார் தொடர்ந்து வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி வருகிறது தி.மு.க அரசு" என தெரிவித்துள்ளார்.

Also Read: "உ.பி, குஜராத்தை விட தமிழ்நாடு பல மடங்கு உயரத்தில் இருக்கிறது" - FREEBIES சர்ச்சைக்கு ஜெயரஞ்சன் பதிலடி!