Tamilnadu
தன் உயிரை கொடுத்து தாய் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுவன்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அர்ச்சனா. இவர் வாய் பேச முடியாதவர். இந்த தம்பதிக்கு கார்த்திக் ராஜா (5), சுபாஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு அர்ச்சனா வீட்டின் சமையல் அறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டு சுவரில் இருந்த ஓட்டை வழியாக பாம்பு ஒன்று நுழைந்துள்ளது.
இதை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கார்த்திக் ராஜா பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம்போட்டுள்ளார். ஆனால் தாய்க்கு காது கேட்காததால் மகன் சத்தத்மபோடுவது கேட்காமல் அவர் சமைத்துக் கொண்டே இருந்துள்ளார். இதனால் சிறுவன் பாம்பு தனது தாயை கடித்து விடக்கூடாது என்பதற்காக அதனை விரட்ட முயற்சி செய்து உள்ளார். அப்போது பாம்பு அச்சிறுவனை கடித்துள்ளது. இதில் சிறுவன் கார்த்திக் ராஜா மயக்கமடைந்தார்.
பின்னர் மயக்கமடைந்த மகனை கண்டு அதிர்ச்சியடைந்ததாய் சிறுவனை மீட்டு கடம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயைக் காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்த சிறுவன் பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்!” : துணை முதலமைச்சர் வாழ்த்து!
-
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட CM MK Stalin: மிகை ஊதியம்,பொங்கல் பரிசு!
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!