Tamilnadu
'அர்ஜுன் படம் பார்த்து தான் கொள்ளையடித்தேன்..' வங்கி கொள்ளையனின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி !
கடந்த சனிக்கிழமை சென்னை அரும்பாக்கம் பகுதியிலுள்ள ஃபெட் பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன்ஸ் (Fed Bank of Gold Loans) வங்கியில் பட்டப்பகலில் கொள்ளை ஒரு சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கிய நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தை வங்கி ஊழியரே, தனது கூட்டாளிகளுடன் செய்துள்ளது காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் ரூ.20 கோடி மதிப்புடைய 31.07 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், சம்பவம் நடந்து இரண்டே நாட்களில் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய கொள்ளையன் முருகன் உட்பட 4 பேரையும் தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் நேற்று அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட மொத்த நகையையும் மீட்டனர். இதைத்தொடர்ந்து குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அவர்கள் கொள்ளையடித்தது எப்படி என்று கண்டுபிடித்தனர்.
அதாவது, வங்கி ஊழியரான முருகன் என்பவர், அந்த வங்கியில் சுமார் 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். எனவே எந்த நகை எந்த இடத்தில் இருக்கும் என்பதை முழுவதுமாக அறிந்துள்ளார். மேலும் அரும்பாக்கம் வங்கி கிளையில் ஊழியர்கள் குறைவு என்பதால் கொள்ளையடிக்க உகந்த இடம் என்றும் எண்ணியுள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று தனது பள்ளி நண்பர்களை கூட்டாளிகளாக சேர்த்து, கத்தியை காட்டி மிரட்டி அனைத்து நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் விரைவில் பணக்காரர்களாக எண்ணியே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதோடு முக்கிய கொள்ளையனான முருகன் அளித்த வாக்குமூலத்தின் படி, தான் இந்த கொள்ளை சம்பவத்தை எப்படி செய்ய வேண்டுமென்று தொடர்ந்து பல திரைப்படங்கள் பார்த்ததாகவும், அதில் குறிப்பாக நடிகர் அர்ஜுன் நடித்த 'ஜென்டில் மேன்' திரைப்படத்தை 10 முறை பார்த்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த வங்கி மட்டுமல்லாமல், வேறு சில வங்கிகளையும் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!