Tamilnadu
சுதந்திர தினத்தில் பொதுமக்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த Surprise Gift.. அது என்ன தெரியுமா?
நாடு முழுவதும் இன்று 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. டெல்லியில் செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.
அதேபோல் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தலைமைச் செயலக்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். இதேபோல் மற்ற மாநில முதல்வர்கள், மாவட்ட ஆட்சியர்கள் என பலரும் தேசியக் கொடியை ஏற்றி விடுதலை போராட்டத்தில் வீர மரணம் அடைந்த தியாகிகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், 75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்களுக்கு ஆட்டோ சேவை இலவசம் என அறிவித்து இயக்கி வருவது அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஒட்டி வருகின்றார். இவர் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் பொதுமக்கள் ஆட்டோவில் இலவசம் அழைத்துச் சென்று வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைக்கப் போராடிய வீரர்களை நினைவும் கூறும் வகையில் இதைச் செய்வதாகத் தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் இந்த தேசப்பற்று அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!