Tamilnadu

விளம்பரம் தேடுபவருக்கும், அஞ்சலி செலுத்துவதற்கும் உள்ள வித்தியாசங்கள் : PTR வெளியிட்ட புகைப்பட ஆதாரங்கள்!

மதுரையில் உயிரிழந்த இராணுவ வீரர் இலட்சுமணன் உடலுக்கு நேற்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். அப்போது அங்கு கட்சிக் கொடியுடன் கூடியிருந்த பா.ஜ.க.வினர் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

மேலும் இராணுவ வீரருக்கு இறுதி மரியாதை செய்திடும் அரசு நிகழ்ச்சியில் கட்சி நிகழ்ச்சியைப் போன்று ஏன் நடந்து கொள்கிறீர்கள்? என அமைச்சர் கேள்வி எழுப்பிட, உடனே அங்கிருந்த பா.ஜ.க.வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலும், குழப்பமும் ஏற்படுத்தினர்.

அமைச்சர் இராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வரும்போது அங்கு கூடி இருந்த பா.ஜ.க-வினர் அவரது காரின் மீது செருப்பு வீசியும், கார் கண்ணாடிகளை அடித்தும் தாக்குதலை நடத்தினர். இந்த சம்பவம் நேற்று பெரும் சர்ச்சையான நிலையில், பலரும் இந்த செயலுக்கு பா.ஜ.க-வுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் கார் மீது செருப்பை வீசி தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Also Read: 'Cinderella ஒத்த செருப்பு' : இதுக்கு என்னங்க அர்த்தம்.. PTR ட்வீட்டுக்கு dictionary-ல் தேடும் சங்கிகள்!

பா.ஜ.க-வினரின் இந்த செயலுக்கு பல்வேறு தலைவருகளும் கண்டனம் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க-வினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு எச்சரிக்கையும் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அமைச்சர் பி.டி.ஆர்., கூறுகையில், "தியாகியை நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடம் பேசுவதற்கான சரியான தருணம் இல்லை. பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை; பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பது தெரியும்” என்றார்.

இந்த நிலையில் தற்போது அமைச்சர் பி.டி.ஆர்., தனது சமூக வலைதளபக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "நேற்றைய நிகழ்வுகளின் கட்டவிழ்ப்பு

நிகழ்வு 1: மதுரை வந்தடைந்த தியாகியின் உடலுக்கு முறையான மரியாதை..

இப்படங்களில் உள்ளவர்களில் விசித்திரமான நபரை கண்டுபிடித்தீர்கள் என்றால்

நாம் ஏன் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதோடு இதுபோன்ற விளம்பரம் தேடும் நடத்தைகளை எதற்காக தவிர்க்க வேண்டுமென்று நான் கூறினேன் என்பதும், இத்தகையவர்களுடன் நான் ஏன் விவாதிக்க மறுக்கிறேன் என்பதும் தற்போது தெளிவாக புரிந்திருக்கும்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அதில் அமைச்சர் மரியாதை செலுத்திய போதும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தியபோது உள்ள வித்தியாசங்கள் புகைப்படங்கள் மூலமாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் விளம்பரம் தேடுவது தொடர்பான எந்த வித அடையாளங்களும் இல்லை.

ஆனால் பா.ஜ.க சார்பில் மரியாதை செலுத்திய போது, சுற்றிலும் கேமரா, மொபைல் போன்ற உபகரணங்களை பயன்படுத்தி புகைப்படங்கள் வீடியோக்கள் எடுக்கப்பட்டது. இதன் மூலம் பா.ஜ.கவினர் விளம்பர நோக்கத்திற்காகவே ஒவ்வொரு விஷயத்தையும் செய்வது அப்பட்டமாக தெரிய வந்துள்ளது.

Also Read: மோடி பழைய வாக்குறுதியே நிறைவேற்றல, இதில் புதிதாக என்ன வாக்குறுதி கொடுப்பாரோ? சுப்பிரமணியன் சாமி கிண்டல்!