Tamilnadu
Chess Olympiad வென்ற அணிக்கு முதல்வர் கொடுத்த ஆச்சர்யம் : ஒன்றிய அரசுக்கு முன் சொல்லி அடித்த தமிழக அரசு !
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் சென்னையில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழா ஜூலை 28 நடைபெற்ற நிலையில், நிறைவு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யானதன், விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இதில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி கோப்பைகளை வழங்கி கெளரவித்தார். இதனிடையே தமிழர்களின் தொன்மைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் விதமாக மேடையில் விளையாட்டுகள், கலைகள், வரலாறுகள் என்று பல இடம்பெற்றது. இதனை அங்கு வந்த பார்வையளர்கள் மகிழ்ச்சியாக கண்டுகளித்தனர்.
முன்னதாக நேற்று நடைபெற்ற செஸ் போட்டித்தொடரின் 11 -வது சுற்று போட்டியில், ஓபன் பிரிவில் இந்திய 'B' அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. மேலும் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், அர்மீனியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
அதோடு மகளிர் பிரிவில் இந்திய 'A' அணி தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெண்கலம் வென்றுள்ளது. மேலும் உக்ரைன் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
மேலும் தனி நபர் பிரிவில் இந்திய வீரர்கள் குகேஷ் மற்றும் நிகல் சரின் தங்கம் வென்று சாதனைப்படைத்த நிலையில், அர்ஜுன் எரிகேசி வெள்ளிப் பதக்கம் வென்றார். அதோடு வைஷாலி, பிரக்ஞானந்தா, திவ்யா தேஷ்முக், தானியா சச்தேவ் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை செய்தனர்.
இந்த நிலையில், பதக்கங்கள் வென்ற 2 இந்திய அணிகளுக்கு (மகளிர் பிரிவில் இந்திய 'A' அணி, ஓபன் பிரிவில் இந்திய 'B' அணி) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.
இந்த பரிசுத்தொகையானது இந்திய ஓபன் பிரிவில் இந்திய 'B' அணியில் விளையாடிய தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன் பாஸ்கரன் உட்பட கேரளாவை சேர்ந்த நிகல் சரின், மகாராஷ்டிராவை சேர்ந்த ராணக் சத்வானி ஆகிய 5 பேருக்கு கிடைத்துள்ளது.
மேலும் மகளிர் பிரிவில் இந்திய 'A' அணியில் விளையாடிய தமிழக வீரங்கனையான வைஷாலி, ஹரிகா துரோணவல்லி, கொனேரு ஹம்பி, தனியா சச்தேவ் ஆகியோருக்கும் கிடைத்துள்ளது.
Also Read
-
பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
-
ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
-
காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
-
“இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
-
முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !