Tamilnadu

ஆடு, நாய்களை கொடூரமாக வேட்டையாடி வந்த சிறுத்தை.. ஈரோட்டில் சிக்கியது எப்படி ?

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் ஆடுகள் போன்ற கால்நடை விலங்குகளை ஏதோ ஒரு விலங்கு வேட்டையாடி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடங்களில் சோதனை செய்த வனத்துறை அதிகாரிகள் அங்கே சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க விவசாயி நிலத்தில் கூண்டு ஒன்று அமைக்கப்பட்டது. மேலும் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராவில் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து நேற்று கூண்டு வைக்கப்பட்டுள்ள தோட்ட விவசாயி வழக்கமாக தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டிருப்பதை கண்டார். பின்னர் வனத்துறைக்கு தகவல் அளித்த பின்னர், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கூண்டில் இருந்த சிறுத்தையை பிடித்தனர்.

மேலும் அதற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதனை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்று விடப்போவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுத்தையை பிடித்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதே போல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மலை அடிவாரப் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், 13 ஆடுகளை ஒரு சிறுத்தை வேட்டையாடியது. இதைத்தொடர்ந்து அதே பகுதியில் இருந்த மற்றொரு தனியார் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட நாயையும் அடித்துக் கொன்றது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா அமைத்து கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: துபாயிலிருந்து இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை.. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது !